திருமணத்தில் உணர்வுகளைக் காட்டிலும் அழகு, செல்வம், சமூக நிலை போன்ற வெளிப்புற அம்சங்கள் முக்கியமாய் போய்விட்டன என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு, எழுத்தாளர் அரவிந்த் தனது வாழ்க்கைத் துணையை தேடும் ஒரு நல்ல ஆண்மகனின் திருமண எதிர்பார்ப்புகள், நிராகரிப்புகள், அனுபவங்கள், உணர்வுகள், தைரியம், எழுதப்பட்ட அனுபவக் காட்சிகள் மற்றும் இதயக் குறிப்புகளாக இனிய கவிதைகள் ஆகியவற்றை அனுபவத்தோடு யதார்த்தமும் சற்று கற்பனையும் கலந்து வாசகர்கள் படித்து எளிதில் உணர்ந்து ஆமோதித்து ஏற்றுக்கொள்ளும் கருத்துக்களாக இந்த புத்தகத்தை வடிவமைத்துள்ளார்.
வெறும் திருமணத்தைப் பற்றி மட்டும் தான் ஆசிரியர் இந்த புத்தகத்தில் பேசுகிறாரா என்றால், அதுதான் இல்லை.
இன்னும் நல்ல நல்ல ஆரோக்கியமான விஷயங்களை, ஒரு ஆண்மகனின் கல்யாண கனவை, அவன் தன் வருங்கால மனைவிக்காக காதலோடு காத்திருப்பதையும், கொஞ்சம் கதையாக நிறைய நினைவலைகளையும், சில காதல் கவிதைகளோடு பட்டாம்பூச்சியும் அணிலும், காற்றும் மழையும், அவனவளுக்காக தூது செல்லும் இயற்கையும் என ஆசிரியர் எக்கச்சக்கமான ரசனைகளையும், அனுபவங்களையும் தன்னுடைய எழுத்துக்களால் பட்டை தீட்டியுள்ளார்.
இப்புத்தகம் ஒரு மென்மையான அனுபவ பகிர்வாக வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அமையும் என்பதில் எள் அளவும் சந்தேகமில்லை.








Reviews
There are no reviews yet.